×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல்…ஒண்டர்புல்

லிவர்பூல்: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, லிவர்பூல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கலடஸரே அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ரவுண்ட் ஆப் 16 சுற்றின் 2ம் நிலை போட்டி லிவர்பூல் நகரில் நேற்று நடந்தது. துவக்கம் முதல் லிவர்பூல் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 25வது நிமிடத்தில் அந்த அணியின் டாம்னிக் ஸோபோஸ்லாய் சிறப்பாக ஆடி முதல் கோல் போட்டார். அவரைத் தொடர்ந்து லிவர்பூல் அணியின் ஹியுகோ எகிடிகே 51, ரையான் கிரேவன்பெர்ச் 53, முகமது ஸலா 62வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டனர். மாறாக, கலடஸரே அணி வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணி அட்டகாச வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ரவுண்ட் ஆப் 16, 2வது நிலை போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை, 3-2 என்ற கோல் கணக்கில் டாட்டன்ஹாம் அணி வீழ்த்தியது. இருப்பினும், 2 நிலை போட்டிகளில் கிடைத்த புள்ளிகள் அடிப்படையில், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அத்லெடிகோ மாட்ரிட் அணி காலிறுதிக்கு முன்னேறியது. இன்னொரு போட்டியில் பேயர்ன் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி காலிறுதிக்குள் நுழைந்தது.

Tags : Champions League Football ,Liverpool…Wonderpool ,Liverpool ,Galatasaray ,UEFA Champions League ,Champions League ,Liverpool… ,
× RELATED உலக கோப்பையில் தடுமாறியபோது யுவராஜ்...