×

உலகக்கோப்பை போட்டி: விளையாட ஈரான் முடிவு

டெஹ்ரான்: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற உள்ளன. இதில் ஆட ஈரான் கால்பந்து அணி தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போது, ஈரானுடன், இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் கடும் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ‘அமெரிக்காவை நாங்கள் புறக்கணிக்கிறோம். ஆனால், ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை. ஈரான் ஆடும் போட்டிகளை மெக்சிகோவில் நடத்தும்படி, ஃபிபா நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறோம்’ என ஈரான் கால்பந்து அமைப்பு தலைவர் மெஹ்தி தாஜ் கூறியுள்ளார்.

Tags : World Cup ,Iran ,Tehran ,United States ,Mexico ,Canada ,Israel ,United States… ,
× RELATED உலக கோப்பையில் தடுமாறியபோது யுவராஜ்...