×

பதவியை நீட்டிக்க அகர்கர் வேண்டுகோள்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர் செயல்பட்டு வருகிறார். கடந்த 2025ல் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றதற்கு பரிசாக, அகர்கருடனான ஒப்பந்தம் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 2027ல் நடக்கும் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகள் வரை, தலைமை தேர்வாளராக தனது பதவிக்காலத்தை நீட்டிக்கும்படி, பிசிசிஐயிடம், அஜித் அகர்கர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதன் மீது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags : Agarkar ,New Delhi ,Ajit Agarkar ,Indian cricket team ,cricket ,World Cup ,
× RELATED உலக கோப்பையில் தடுமாறியபோது யுவராஜ்...