×

நாசரேத் திருவள்ளுவர் காலனியில் இலவச கண் சிகிச்சை முகாம்

நாசரேத், மார்ச் 20: நாசரேத் திருவள்ளுவர் காலனியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் திரவியபுரம் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளுவர் காலனியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆசிரியர் மர்காஷிஸ் மோசஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். இதில் பொதுமக்கள் பங்கு பெற்று கண் பரிசோதனை மேற்கொண்டு பயன் பெற்றனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ் நன்றி கூறினார்.

Tags : Nazareth Thiruvalluvar Colony ,Nazareth ,Thiraviyapuram ,Jayaraj Annapakiyam ,CSI Polytechnic College ,Thiruvalluvar… ,
× RELATED தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு...