×

தேனியில் கொளுத்தும் வெயில் மண்பானைகளை வாங்க மக்கள் ஆர்வம்

தேனி, மார்ச் 20: தேனி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பகல் வேலைகளில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் புழுக்கம் அதிகம் இருக்கிறது. காலை 8 மணிக்கே துவங்கி விடும் வெயில் கொடுமை தொடர்ந்து மாலை 6 மணி வரை நீடிக்கிறது. இதனால் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேனி நகரில் பெரியகுளம், கம்பம், மதுரை சாலைகளில் எப்போதும் போக்குவரத்து அதிகம் இருக்கும். ஆனால் தற்போது வெயிலின் கொடுமை அதிகம் உள்ளதால் பகல்நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தேனியில் அதிகரித்துள்ள வெயில் கொடுமையின் காரணமாக சாலையோரங்களில் இளநீர், பனை நுங்கு, தர்பூசணி, கரும்புச்சாறு விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. மேலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மண்பானை தண்ணீரை விரும்பி பருகுவதால் மண்பானையில் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் வைப்பதும், நீர்மோர் மண்பானையில் வைத்து விற்பதும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக தேனியில் மண்பானை, மண் தண்ணீர் குடுவை விற்பனை அதிகரித்துள்ளது. இதற்காக தேனி மாவட்டத்தில் மண்பானை தயாரிக்கும் பகுதிகளில் குடிநீர்பானை உற்பத்தி அதிகரித்துள்ளது.

Tags : Theni ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது