×

தேனி என்.எஸ்.கல்லூரியில் 29வது ஆண்டுவிழா

தேனி, மார்ச் 20: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியின் 29வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் தர்மராஜன், உபதலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் எம்.எம்.ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் மாறன்மணி வரவேற்று பேசினார். விழாவில் 29ம் ஆண்டுக்கான சுவடுகள் மலர் வெளியிடப்பட்டது. இதனை விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரியின் முன்னாள் மாணவியான கம்பம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் அங்கயர்கண்ணி பெற்றுக் கொண்டார். விழாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர் சுசீலாசங்கர் வாழ்த்தி பேசினர். விழாவில் மாணவியர்களின் நாடக, நாட்டியங்கள் நடந்தன. முடிவில் கல்லூரி செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Theni N.S. College ,Theni ,Theni Nadar Saraswathi Arts and Science College ,Vadapudupatti ,Theni Melapettai ,Hindu Nadars ,Uravinmurai ,President ,Dharmarajan ,Vice President ,Jeevakan ,General Secretary… ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது