×

தேர்தல் விதிமுறையால் 34 துப்பாக்கி ஒப்படைப்பு

சிவகாசி, மார்ச் 20: சட்டசபை தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து சிவகாசி உட்கோட்டத்தில் 34 துப்பாக்கிகள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவகாசி உட்கோட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என 34 பேர் தங்கள் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர். சட்டசபை தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என, டிஎஸ்.பி அணில்குமார் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் 34 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் ஒப்படைத்துள்ளனர். மேலும், 7 உரிமம் பெற்ற துப்பாக்கிகள், வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயன்பாட்டில் வைத்து கொள்ள தேர்தல் விதிமுறைகள் வழிக்காட்டுதல்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivakasi ,Sivakasi Inground ,Sivakasi Inlet ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது