×

கொட்டித் தீர்த்த கோடை மழை

திருவாடானை, மார்ச் 20: திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரண்டாவது நாளாக திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. திருவாடானை நகர் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் பரவலாகக் கொட்டித் தீர்த்த கனமழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில தினங்களாக வாட்டி வதைத்த வெப்பமான சூழல் மாறி, தற்போது குளிர்ந்த காற்றுடன் கூடிய இதமான காலநிலை நிலவுவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திடீர் மழையானது மிளகாய், மல்லி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags : Thiruvadana ,Thiruvadanai ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது