×

தேனி லைப் இன்னோவேசன் பள்ளி சார்பில் மார்ச் 26ம் தேதி முதல் இலவச நீட் பயிற்சி

தேனி, மார்ச் 20: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள லைப் இன்னோவேசன் பப்ளிக் பள்ளியின் சார்பில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிப்பது குறித்து பள்ளியின் தாளாளர் நாராயணபிரபு கூறியதாவது, ‘‘தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேனி லைப் நீட் அகாடமி துவங்கப்பட்டுள்ளது. தமிழ்வழி கல்வி மூலம் பயிலும் அரசு பள்ளி மாணவ,மாணவியர் 100 பேருக்கு முற்றிலும் இலவசமாக நீட் பயிற்சி மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. வருகிற 26ம் தேதி முதல் நடக்க உள்ள நீட் பயிற்சி வகுப்புக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இப்பயிற்சியானது கோட்டா கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களால் பாட வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
மேலும், இம்மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆகாஷ் நீட் பயிற்சி மையத்தின் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. இலவசமாக இப்பயிற்சி பெற 80120 12777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

Tags : Theni Life Innovation School ,Theni ,Life Innovation Public School ,Vadapudupatti ,Narayana Prabhu ,Municipality ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது