×

வரத்து சரிவால் நுங்கு விலை உயர்வு

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரி மாவட்டத்தில், கோடை வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக, வெயில் 90 டிகிரியை கடந்து, அனல் காற்றை வீசி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 98 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் வராமல், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தங்களின் உடல் சூட்டை தணிக்க பழ வகைகள், இயற்கை குளிர்பானங்களை பருகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திற்கு சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர் பகுதிகளில் இருந்து நுங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்தாண்டுகளில் ஏராளமான பனை மரங்கள் வெட்டப்பட்டதால் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. மேலும் பதநீர் இறக்குவதற்காக விடப்படுவதாலும் நுங்கு வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், தர்மபுரி நெசவாளர் நகர் மற்றும் இலக்கியம்பட்டி ஆகிய இடங்களில் குறைந்த அளவிலான வியாபாரிகளே நுங்கு விற்பனை செய்கின்றனர். நடப்பாண்டில் 6 நுங்குகள் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு 3 நுங்குகள் ரூ.20க்கு என விற்பனையானது.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,
× RELATED தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு...