×

மேலூர் அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோகிராம் கருவி அமைப்பு

 

மேலூர், மார்ச் 18: மேலூர் அரசு மருத்துவமனையில், மார்பக புற்றுநோய் பாதிப்பை துவக்கநிலையிலேயே கண்டறிய உதவும் மேமோகிராம் கருவி நிறுவப்பட்டுள்ளது. மேலூர் அரசு மருத்துவமனையில், இந்த தாலுகாவில் உள்ள கீழவளவு, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேரந்த ஏராளமானோர் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த மருத்துவமனையில், தமிழக அரசின் சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய மருத்துவ கருவிகள் அமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு வராமல், மேலூரிலேயே முழுமையாக சிகிச்சை பெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

Tags : Melur Government Hospital ,Melur ,Keezhavalavalu ,Karungalakudi ,Kottampatti ,
× RELATED சட்டமன்ற தேர்தல் காரணமாக ஊட்டியில் மலர் கண்காட்சி தாமதம்