ஊட்டி, மார்ச் 18: சட்டமன்ற தேர்தல் காரணமாக மலர் கண்காட்சி நடத்தும் தேதி அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சமவெளிப் பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஆண்டுதோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, படகு போட்டி, ரோஜா கண்காட்சி, படகு அலங்காரம், குன்னூரில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மற்றும் கூடலூரில் வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி மற்றும் கோடை விழா ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.
