×

திருவாரூர் மாவட்டத்தில் விதைகளை பரிசோதனை செய்ய வேண்டும்

 

திருவாரூர், மார்ச் 18: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களது விதைகளை பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேளாண் விதைப் பரிசோதனை அலுவலர் சிவவீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தரமான விதையானது, இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதைச்சான்றளிப்பு தரத்திற்கு ஏற்ற குறைந்தபட்ச முளைப்புத்திறன், இனத்தூய்மை, புறத்தூய்மை, நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் மற்றும் விதை நலத்துடன் கூடிய வீரியமும் கொண்டிருக்க வேண்டும். அதன்படி, விதை சேமிப்பிற்கு முன் கையாள வேண்டிய முறைகளாக வயலிலேயே விதைகளைத் தாக்கும் பூச்சிகளான பயறு வண்டு, நெல் அந்துப்பூச்சி மற்றும் அரிசிக் கூன்வண்டு போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த பால்பிடிக்கும் சமயத்தில் மாலத்தியான 50 ஈசி பூச்சிக் கொல்லியை 0.5 சதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Officer ,Sivaveerapandian ,India… ,
× RELATED சட்டமன்ற தேர்தல் காரணமாக ஊட்டியில் மலர் கண்காட்சி தாமதம்