×

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.85 லட்சம் பறிமுதல்

 

தஞ்சாவூர், மார்ச் 18: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது.மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகைகள் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். சரியான ஆவணங்கள் காண்பித்த பிறகு அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்கின்றனர்.

Tags : Thanjavur ,Tamil Nadu ,
× RELATED சட்டமன்ற தேர்தல் காரணமாக ஊட்டியில் மலர் கண்காட்சி தாமதம்