×

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சின்னர்-மெத்வதேவ்

இண்டியன்வெல்ஸ்: இண்டியன்வெல்ஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் டேனியில் மெத்வதேவிடம், ஸ்பெியனை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.  அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் – ரஷ்ய வீரர் டேனியில் மெத்வதேவ் மோதினர்.

துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ், முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அடுத்த செட்டில் அல்காரஸ் சுதாரித்து ஆடியதால் டைபிரேக்கர் வரை அந்த செட் நீடித்தது. இருப்பினும் அந்த செட்டையும் 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் மெத்வதேவ் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர். இப்போட்டியில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சின்னர் – மெத்வதேவ் மோதவுள்ளனர்.

Tags : Indian Wells Open Tennis Final ,Sinner-Medvedev ,Indian Wells Open Men's Singles Semifinal ,Indian Wells ,Carlos Alcaraz ,Spain ,Daniil Medvedev ,Indian Wells Open Tennis Tournament ,Indian Wells, USA ,
× RELATED சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தாய்லாந்து வீராங்கனை சுபனிதா சாம்பியன்