- கினார்டு
- ஆண்ட்ரெஸ்ஸி
- இந்தியன் வெல்ஸ்
- மானுவல் கினார்ட்
- கைடோ ஆண்ட்ரெஸ்ஸி
- மொனாக்கோ
- வாலண்டைன் வச்செரோட்
- ஆர்தர் ரின்டர்னெக்
இண்டியன்வெல்ஸ் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் நேற்று, பிரெஞ்ச் வீரர் மேனுவல் கினார்ட், அர்ஜென்டினா வீரர் கிய்டோ ஆன்ட்ரோஸி இணை, மொனகாஸ்க் வீரர் வாலன்டின் வஷரோட், பிரெஞ்ச் வீரர் ஆர்தர் ரின்டர்நெக் இணையுடன் மோதியது. இப்போட்டியில் முதல் செட்டில் இரு இணைகளும் சிறப்பாக ஆடியதால் டைபிரேக்கர் வரை நீண்டது.
கடைசியில் அந்த செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் கினார்ட், ஆன்ட்ரோஸி இணை கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர்கள் 2வது செட்டையும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினர். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற கினார்ட், ஆன்ட்ரோஸி இணை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
