×

பிசிசிஐ நமன் விருதுகள் விழா சிறந்த சர்வதேச வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விருது

மும்பை: உள்நாடு மற்றும் சர்வதேச போட்டிகளில் கடந்தாண்டு சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, மும்பையில் நேற்று, பிசிசிஐயில் நமன் விருதுகள் விழாவின்போது அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியின்போது, கடந்தாண்டில் 4 ஐசிசி போட்டிகளில் சாம்பியன் பட்டங்கள், இந்தாண்டில் டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் கவுரவிக்கப்பட்டன. பாலி உம்ரிகர் சர்வதேச சிறந்த வீரர் விருது, சுப்மன் கில்லுக்கும், சிறந்த சர்வதேச வீராங்கனை விருது, ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட்டது.

உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருது ஆயுஷ் மாத்ரேவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஜூனியர் வீராங்கனை விருது, ஐரா ஜாதவுக்கும், சிறந்த சீனியர் வீராங்கனை விருது ஷபாலி வர்மாவுக்கும் அளிக்கப்பட்டது. சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், ராகுல் டிராவிட், ரோஜர் பின்னிக்கு வழங்கப்பட்டன. சிறந்த சர்வதேச புதுமுக வீராங்கனை வீருது ஸ்ரீசரணிக்கும், சிறந்த சர்வதேச புதுமுக வீரர் விருது ஹர்சித் ராணாவுக்கும் வழங்கப்பட்டது.

Tags : BCCI Naman Awards Ceremony ,Smriti Mandhana ,Mumbai ,ICC ,
× RELATED பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா F1 Grands Prix...