×

இலங்கை தமிழர் முகாமில் சிதிலமடைந்துள்ள சுற்றுச்சுவர்கள்

 

கரூர், மார்ச். 11: கரூர் ராயனூர் இலங்கை தமிழர் முகாமினை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் ஆங்காங்கே பழுதடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இந்த முகாமில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில், தற்போது பெரும்பாலான பகுதிகள் சிதிலடைந்து, மோசமான நிலையில் உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் சுற்றுச்சுவர் உள்ளது.
இதனை புதுப்பித்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, அனைவரின் நலன் கருதி இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.

Tags : Karur ,Karur Rayanur ,Tamil camp ,Rayanur ,Karur Municipal Corporation ,
× RELATED அரவக்குறிச்சியில் வாகன சோதனை: ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2,84,700 பறிமுதல்