×

அரவக்குறிச்சியில் வாகன சோதனை: ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2,84,700 பறிமுதல்

அரவக்குறிச்ச, மார்ச். 27: அரவக்குறிச்சியில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.84700 லட்சம் பிடிப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர் அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர் வரதராஜன் தலைமையிலான வடபழனி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கன்னிவாடியிலிருந்து கொடுமுடி நோக்கி சென்ற ஆம்னி வாகனத்தை சோதனை செய்தனர்.

வாகனத்தில் பயணம் செய்த ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த எமகண்டனூர் பகுதியைச் சார்ந்த கோகுல் (24), என்பவரிடமிருந்து உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,00,000 பறிமுதல் செய்யப்பட்டதுஆடு வாங்குவதற்காக பணம் கொண்டு சென்றதாக கூறினார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை.

இதேபோல் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டிக்கோட்டை சுங்கச்சாவடி அருகே, கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் தூத்துக்குடியிலிருந்து கன்னிவாடி நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனத்தில் தூத்துக்குடியை சேர்ந்த வேலுச்சாமி உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.96,000 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கன்னிவாடியிலிருந்து அரவக்குறிச்சி நோக்கி சென்ற ஒரு வாகனத்தில் அரவக்குறிச்சி ஹபீப் நகரைச் சேர்ந்த சிவாஜி கணேசன் என்பவரிடம் ரூ.88,700 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.84700 லட்சம் தொகை, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

Tags : Aravakurichi ,Tamil Nadu Assembly elections ,Assembly ,District ,Education Officer ,Varadarajan… ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி...