×

அம்மா உணவகங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை :சென்னை மாநகராட்சி

சென்னை : சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தகவல் அளித்துள்ளார். மேலும், “போதிய சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி போதிய இருப்பை வைக்க அறிவுறுத்தப்பட உள்ளது. அதேபோல், சென்னையில் எல்பிஜி மூலம் இயங்கும் மின் மயானங்களில் எரிவாயு தட்டுப்பாடு தற்போது வரை இல்லை. வரும் நாட்களில் பிரச்னை எழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Municipality ,Chennai ,Municipal Commissioner ,Kumrakuruparan ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...