×

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி எழுத்து தேர்வு

தர்மபுரி, மார்ச் 10: தர்மபுரி அருகே கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடந்த பட்டய பயிற்சி எழுத்து தேர்வை மேலாண்மை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில், தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் உள்ளது. இங்கு 57 பேர் 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுக்கான இறுதி எழுத்து தேர்வு நடந்தது. இந்த எழுத்து தேர்வை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது, தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் லோகநாதன், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய விளம்பர அலுவலர் விஜயகுமார் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Cooperative Management Institute ,Dharmapuri ,Dharmapuri Cooperative Management Institute ,Morapur, Dharmapuri district ,
× RELATED தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு...