×

பாஜ கைப்பாவையாக எடப்பாடி செயல்படுகிறார்: திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏ அட்டாக்

 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தும்பல் பகுதியைச் சேர்ந்தவர் இளையகண்ணு (60). இவர் கடந்த 2001-06ல், ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவர் நேற்று காலை, சுற்றுலா அமைச்சர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி ஆகியோர் முன்னிலையில், திமுகவில் இணைந்தார்.

பின்னர், முன்னாள் எம்எல்ஏ இளையகண்ணு அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி வழங்கி வருகிறார். அவரது செயல்பாடுகளால் தாய் கழகத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளேன். அதிமுகவில் பல ஆண்டாக நானும், என் தந்தையும் இருந்துள்ளோம். என் தந்தை திருமன் 1980-84ல் ஏற்காடு அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். பல சிறப்பான திட்டங்களை செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைப்பார்.

எடப்பாடி பழனிசாமி, ஆரம்ப காலத்தில் கட்சிக்காக உழைத்த யாரையும் மதிப்பதில்லை. அரவணைத்து செல்லவும் வாய்ப்பில்லை. பாஜவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். ஆரம்ப காலத்தில் அதிமுகவில் இருந்த பல்லாயிரம் பேர் திமுகவுக்கு வருவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடன் சேர்ந்து 2 ஆயிரம் பேர் திமுகவில் இணையவுள்ளனர். அதிமுகவில் அதிருப்தியாக உள்ளவர்களை, திமுகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Edappadi ,BJP ,AIADMK MLA ,DMK ,Ilayakannu ,Pettanayakkanpalayam Thumbal ,Salem district ,Yercaud ,Tourism Minister ,Rajendran ,Eastern District ,S.R. Sivalingam ,MP… ,
× RELATED சொல்லிட்டாங்க…