×

குருந்தன்கோட்டில் அட்மா திட்ட ஆலோசனைக்குழு கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 3: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய வளாக கூட்ட அரங்கில் அட்மா திட்ட முகாம் அட்மா திட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் தீபா முன்னிலை வகித்தார். உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருண் அனைவரையும் வரவேற்றார். குருந்தன்கோடு வட்டார தொழில் நுட்ப மேலாளர் மெர்வின் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான சீரமைப்பு அட்மா திட்டங்கள் குறித்தும் அதற்காக பயனாளிகள், ஒதுக்கீடுகளை பட்டியலிட்டும் பேசினார். கூட்டத்தில் குருந்தன்கோடு வட்டாத்தில் 30-க்கு மேற்பட்ட அட்மா திட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார உழவர் நண்பர் தேவதாஸ் நன்றி கூறினார்.

Tags : Adma Project Advisory Committee ,Kurunthancode ,Nagercoil ,Adma ,Project ,Camp ,Kurunthancode Panchayat Union Complex ,Vijayakumar ,Assistant Director ,Agriculture ,Deepa ,Arun ,
× RELATED மன அழுத்தம் காரணமாக 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: மாங்காடு அருகே சோகம்