சிவகாசி, மார்ச் 3: சிவகாசி அருகே சட்டவிரோதமாக தயாரித்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி அருகே கிளியம்பட்டி பகுதியில் மாரனேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வசித்து வரும் கருப்பசாமி என்பவர் தனது கார் செட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களையும், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
