பரமக்குடி, மார்ச் 3: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புற ஊராட்சிகளில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து, கேரம், கபடி, சிலம்பம், பேட்மிண்டன், செஸ் உட்பட பல வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் தாமரை தலைமையில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி 36 வார்டுகளின் கவுன்சிலர்களிடம் ஒப்படைத்தார். விளையாட்டு உபகரணங்களை வார்டு கவுன்சிலர்களிடம் பெற்று நகராட்சி பூங்கா மற்றும் பொதுவிளையாட்டு மைதானங்
களில் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
