சிவகாசி, மார்ச் 3: சிவகாசியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி கவிதாநகர் சுடுகாடு பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த தினேஷ்குமார் (22) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று சிவகாசி அருகே கட்டச்சின்னம்பட்டி பகுதியில் திருத்தங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வசித்து வரும் சுந்தரம் (60) என்ற முதியவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
