×

காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

பரமக்குடி, மார்ச் 3: பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெvற்றது.
பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு மற்றும் தமிழக முதல்வரின் காமராஜர் விருதை பெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் இதயத்துல்லாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராஜாராம்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிபாலன், சோபா ரெங்கநாதன், நிர்வாகிகள் வக்கீல் கிருஷ்ணராஜ், செந்தில், ஆனந்தி, கணேசன், காஜா நஜிமுதீன் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் கோதண்டராமன் வரவேற்றார்.
தமிழக அரசின் காமராஜர் விருது பெற்ற காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் இதயத்துல்லாவை பாராட்டி பேசினர். தொடர்ந்து நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, மகளிர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் ராமலட்சுமி, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்னுல் ஆலம், தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் சங்க தலைவர் போஸ் மற்றும் பரமக்குடி பகுதி ஜமாத் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Congress party ,Paramakudi ,state ,vice president ,Idhayatulla ,Tamil Nadu ,Chief Minister… ,
× RELATED கோடை மழை காலத்தில் பயிர்களை...