×

அரசு பள்ளியில் பிறந்த தின விழா

காளையார்கோவில்,மார்ச்3: காளையார் கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் பேடன்பவுல் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஈஸ்வர பிரதாப் வரவேற்று பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் லதா தலைமை தாங்கினார். சாரணாசிரியர் நாகராஜன் பேடன் பவுலின் வாழ்க்கை வரலாறு பற்றி விளக்கி கூறினார். தலைமை ஆசிரியர், மாணவர்கள் சேவை மனப்பான்மையை பள்ளியில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்து கூறினார். பள்ளியின் பசுமைப்படை ஆசிரியர் ராம்குமார் சாரண மாணவர்கள் சிக்கனமாகவும் நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும் என்று விளக்கிக் கூறினார்.

Tags : Kalaiyarkovil ,Baton Boul ,Kalaiyarkovil Government Higher Secondary School ,Ishwara Pratap ,Josephine Latha ,Nagarajan Baton Boul… ,
× RELATED கோடை மழை காலத்தில் பயிர்களை...