×

அரையிறுதியில் இந்தியா: 5ம் தேதி இங்கிலாந்துடன் மோதல்

கொல்கத்தா: உலகக்கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றின் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸின் துவக்க வீரர் ஷாய் ஹோப் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ரோஸ்டன் சேஸ் 40 ரன்னிலும், ஷிம்ரோன் ஹெட்மயர் 27 ரன்னிலும், ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

15வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா, ஷெர்பேன் ரூதர்போர்டை 14 ரன்னில் அவுட்டாக்கினார். அதன் பின் இணை சேர்ந்த ரோமேன் பாவல் (34 ரன்), ஜேசன் ஹோல்டர் (37 ரன்) சிறப்பாக ஆடி 5வது விக்கெட்டுக்கு, 35 பந்துகளில் 76 ரன் குவித்தனர். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ், 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்தது.

இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதியில் நுழைந்த இந்திய அணி, 5ம் தேதி நடைபெறும் போட்டியில் இங்கிலாந்துடன் மோதுகிறது.

* ரன் குவிப்பை தடுத்த பும்ரா
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் நேற்று, வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர்கள் கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். விக்கெட் விழாதா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் ஷாய் ஹோப் கிளீன் போல்டாகி, வெஸ்ட் இண்டீஸ் ரன் குவிப்பை மட்டுப்படுத்தினார். சிறிது நேரத்தில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ரன் வேகம் உயரத்துவங்கிய சமயத்தில் 12வது ஓவரை வீசிய இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா, ஷிம்ரோன் ஹெட்மயரையும், ரோஸ்டன் சேஸையும் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

Tags : India ,England ,Kolkata ,World Cup T20 Super 8 round ,West Indies ,Eden Gardens ,Shai Hope ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் ஆண்ட்ரீவா...