- தன்வி சர்மா
- ஒகுஹாரா
- ஓர்லியன்ஸ் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள்
- ஆர்லியன்ஸ்
- நட்சுகி நித்திரா
- ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்
ஓர்லியான்ஸ்: ஓர்லியான்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீராங்கனை தான்வி சர்மா, ஜப்பான் வீராங்கனை நாட்சுகி நிதைரா மோதினர். இப்போட்டியின் துவக்கம் முதல் தான்வி சர்மா ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். அதனால் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் அந்த செட்டையும் 21-14 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹரா, 21-18, 21-8 என்ற நேர் செட்களில் வியட்நாம் வீராங்கனை நுகுயென் துய் லின்னை வீழ்த்தினார். இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் தான்வி சர்மா – ஒகுஹரா மோதவுள்ளனர்.
