கொல்கத்தா: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா, ஐபிஎல்லில் ஆடிவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை டி20 போட்டிக்கு முன், பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று ஆடியபோது ஹர்சித் ராணாவின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும், உடனடியாக அவரால் போட்டிகளில் பங்கு பெற முடியாத சூழ்நிலை உள்ளதால், ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளர் அபிஷேக் நய்யார் கூறுகையில், ‘கேகேஆர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ஹர்சித் ராணா காயம் காரணமாக ஐபிஎல்லில் ஆடமாட்டார். இந்த செய்தி, கேகேஆர் அணிக்கு பெரும் பின்னடைவு’ என்றார்.
