- சில்லி பாயிண்ட்…
- ஐதராபாத்
- எட்வர்ட்ஸ்
- ஹைதெராபாத்
- இஷான் கிஷான்
- சன்ரைஸ் ஹைதராபாத்
- பாட் கம்மின்ஸ்
- ஆஸ்திரேலியா...
* சன்ரைசர்ஸ் அணியின் எட்வர்ட்ஸ் காயம்
ஐதராபாத்: சன்ரைசரஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று வந்த பேட் கம்மின்ஸ் காயத்தால் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு மாற்றாக, இஷான் கிஷண் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேக் எட்வர்ட்ஸ் காலில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல்லில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ஜேக் எட்வர்ட்ஸ், ரூ. 3 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். அந்த அணியால் ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த ஒரே அன்கேப்டு வீரர் ஜேக் எட்வர்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
* ராஜஸ்தான் அணியில் சாம் கர்ரன் விலகல்
ஜெய்ப்பூர்: சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நடந்த அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணியில் முன்னணி ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் இடம் பெற்றிருந்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் அவர் இருந்தார். ஆனால், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜாவை கொடுத்து அவர்களுக்கு மாற்றாக, சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது. இந்நிலையில், இடுப்புப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம் கர்ரன் ஐபிஎல் போட்டிகளில் ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அதையடுத்து தக்க மாற்று வீரரை ராஜஸ்தான் அணி தேடி வருகிறது.
* வீராங்கனைகளுக்கு ஈரானில் வரவேற்பு
டெஹ்ரான்: ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளில் ஈரான் மகளிர் அணி பங்கேற்றது. அச்சூழலில் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் வெடித்தது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதாக ஈரான் மகளிர் கால்பந்து வீராங்கனைகளில் பலர் கூறினர். அந்த செய்தி, ஈரானில் பெரியளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் சில நாட்களில் ஈரான் கால்பந்து வீராங்கனைகள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு தற்போது ஈரான் திரும்பி உள்ளனர். அவர்களுக்கு ஈரானில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
