×

ஒரத்தநாடு திமுக நகர கழகம் சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரம்

ஒரத்தநாடு, பிப்.27: ஒரத்தநாடு திமுக நகர கழகம் சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திமுக நகரக் கழகம் சார்பாக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் அறிவிப்பின் பேரில் திமுக நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் முன்னாள் மாவட்ட பெருந்தலைவர் செல்வி சிவஞான முன்னிலையில் வெல்லும் தமிழ் பெண்கள் பிரச்சாரம் மகளிர் அணி சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு மகளிர் அணி பொறுப்பாளர்கள் சுஜாதா மழலை செல்வி மற்றும் பூத் கமிட்டி ஏஜெண்டுகள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஒரத்தநாடு வடக்கு தெரு உட்பட பல்வேறு தெருக்களில் வசிக்கும் மக்களிடம் திமுகவின் சாதனைகளை எடுத்துரைத்து வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரையை மேற்கொண்டனர்.

 

Tags : Orathanadu DMK Urban Corporation ,Orathanadu ,Thanjavur district ,Thanjavur ,district ,DMK Urban Corporation… ,
× RELATED கோடை மழை காலத்தில் பயிர்களை...