×

தா.பழூரில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தா.பழூர், பிப்.27: அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்றது. அப்போது, மருத்துவ பரிசோதனை மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினம் அறிந்து கொள்ளப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் உயிர் வாழ்தல், அவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்தல், பெண் கல்வியை மேம்படுத்துதல், ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

ஆண், பெண் பாலின பாகுபாட்டை களைந்து பெண் குழந்தைகளின் வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.  பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், திருமண உதவி திட்டம் போன்ற கருத்துக்களில் விழுப்புரம் எரிதழல் ஏழுமலை தப்பாட்ட இசைக்கலைஞர்கள் பாடல்களை பாடி நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

Tags : Tha.Pazhur. ,Tha.Pazhur ,Social Welfare Department ,Tha.Pazhur Kadayeedi ,Ariyalur district ,Tha.Pazhur Government Higher Secondary School… ,
× RELATED தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு...