×

கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

கரூர், பிப். 27: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இநத காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் அதிகளவு கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

 

Tags : Revenue Department ,Karur ,Federation of Revenue Department Associations ,Karur District Collector ,District Chairman ,Anbazhagan ,
× RELATED அரவக்குறிச்சியில் வாகன சோதனை: ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2,84,700 பறிமுதல்