×

நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் மார்ச் 4க்கு மாற்றம்

திருச்சி, பிப்.26: திருச்சி மாவட்டத்தில் நாளை பிப்.27 அன்று நடைபெற இருந்த, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு வரும் மார்ச்.4 ம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை தொடர்பான கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம்.விவசாயிகளும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தொிவித்துள்ளார்.

 

Tags : Trichy ,Farmers' Grievance Redressal Day ,District Collector ,Saravanan ,
× RELATED மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில்...