×

தா.பேட்டை அருகே கரிகாலி -உத்தண்டம்பட்டி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி

தா.பேட்டை, மார்ச் 16: திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கரிகாலி முதல் உத்தண்டம் பட்டி வரை தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கரிகாலி முதல் உத்தண்டம்பட்டி வரை சாலை மிகவும் பழுதடைந்து இருந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

எனவே சாலையை சீரமைத்து புதிய தார்சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைளை ஏற்று புதிய தார் சாலைக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ முயற்சியால் நிதி பெறப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

புதிய தார்சாலை அமைக்கும் பணி துவங்கியதற்கு பொதுமக்கள் தமிழக அரசிற்கும், காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏவிற்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், திமுக நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட பலர் உனிருந்தனர்.

 

Tags : Karikali ,Utthandampatti ,Tha.Pettai ,Musiri ,MLA Kaduvetti Thiagarajan ,Trichy district ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி ஆர்ப்பாட்டம்