×

கொப்பனாபட்டியில் ஆட்டோ சங்க துவக்க விழா: பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்

பொன்னமராவதி, பிப். 26: பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் ஆட்டோ சங்க துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் அண்ணா ஆட்டோ சங்க துவக்க விழா நடந்தது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் வைரமுத்து புதிய சங்கத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் காசி கண்ணப்பன், ஆலவயல் சரவணன், நகர செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் மாரிமுத்து, பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வைரமுத்து தலைமையில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளி ரதம் இழுக்கப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.

 

 

Tags : Auto Sangam ,Koppanapatti ,Ponnamaravathi ,Anna Auto Sangam inauguration ceremony ,Pudukkottai district ,Former ,Tamil Nadu ,Housing Board ,Vairamuthu… ,
× RELATED கோடை மழை காலத்தில் பயிர்களை...