- பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம்
- குன்னம்
- பா.ம.க மாவட்டம்
- நிர்வாகி
- குழு
- குன்னம், பெரம்பலூர் மாவட்டம்
- பா.ம.க.
- மாவட்டம்
- செந்தில்குமார்
- மாவட்டப் பொதுக்குழு
- கண்ணபிரான்
- மாவட்ட நிர்வாகக் குழு
- அன்புச்செல்வன்
- அரியலூர்
- பெரம்பலூர்
குன்னம், பிப்.26: பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் பாமக மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னம் தனியார் மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கண்ணபிரான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்புச்செல்வன், அரியலூர் மற்றும் பெரம்பலூர் அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் , மாவட்ட பொருளார் அலமேலு, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் சங்க செயலாளர் சமட்டிகுப்பம் ஆறுமுகம், மாநில துணை தலைவர் முருகன், மாநில ஊடகப் பேரவை துணை செயலாளர் எஸ். பி. காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பாட்டாளி சொந்தங்கள் ஒன்று சேர்ந்து கிராமம் தோறும் வீடு, வீடாக சென்று நமது கொள்கை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். மேலும் கிராமந்தோறும் திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பத்துக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் பாமகவில் இணைந்தனர்
