×

வேப்பந்தட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர், பிப்.21: வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தை தாசில்தார் துரைராஜ் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்டக் கலெக்டருமான மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா ஆகியோரது உத்தரவுகளின் படி,

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை தாலுக்கா அலுவலகத்தில் நேற்று (20ம் தேதி) விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் தலைமை வகித்து கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்த வாக்காள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனிதாசில்தார் சுகுணா, தேர்தல் துணை தாசில்தார் பெரியண்ணன், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர்கள் தனலட்சுமி மற்றும் சிவா உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் பலர் தங்களது கையொப்பத்தினை இட்டனர்.

மேலும் வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற கருப்பொருளுடன் தாசில்தார் துரைராஜ் வாசிக்க வாக்காளர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.நிகழ்ச்சியில் தாலுகா அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வேப்பந்தட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக தாலக்கா அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், மனுதாரர்கள் அனைவரும் கையெழுத்திட்டுவிட்டுச் சென்றனர்.

 

Tags : Veppandhattai ,Perambalur ,Tahsildar Durairaj ,Veppandhattai taluka ,District Election Officer ,District Collector ,Mrinalini ,Returning Officer ,Perambalur Assembly ,
× RELATED தமிழ்க்கூடல் விழா தாய் மொழியை பிறமொழி கலப்பில்லாமல் பேசவேண்டும்