- பரவை கிராமம் முதியோர் இல்லம்
- குன்னம்
- முதியோர் இல்லம்
- பரவை
- குன்னம் தாலுக்கா, பெரம்பலூர் மாவட்டம்
- தேர்தல் ஆணையம்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- மாவட்ட ஆட்சியர்…
குன்னம், பிப். 25: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பரவாய் கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில், முதியோர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி பரவாய் கிராமத்தில் தீமைக்கும் நன்மை செய் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது முதியவர்கள் அனைவருக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, தேர்தல் துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
