- பெரம்பலூர் மாவட்டம்
- பெரம்பலூர்
- மாவட்டம்
- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- மாவட்ட கலெக்டர்
- மிருணாளினி
- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாநாட்டு மண்டபம்
பெரம்பலூர்,பிப்.26: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (27ஆம் தேதி) நடைபெற உள்ளது.இது குறித்து மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (27ஆம்தேதி) காலை 10 மணியளவில் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
