×

மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்

ஜெயங்கொண்டம், பிப்.26: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி 2025-26ம் கல்வியாண்டில் மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி வானவநல்லூரில் பயிலும் எட்டாம் வகுப்பைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவன், களிமண் சுதை வேலைப்பாட்டில் மாநில அளவில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். அந்த மாணவனை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால், இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் வேல்முருகன், (தொடக்க நிலை) மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி, வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், நிர்மலா, முன்னாள் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி, மேற்பார்வையாளர் கண்ணதாசன், ஆசிரியர் பயிற்றுநர் சரவணன், பள்ளியின் தலைமையாசிரியர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்.

 

Tags : -level art festival ,Jayankondam ,Akash ,Vanavanallur ,Panchayat Union Middle School ,Jayankondam Union ,Ariyalur ,district ,
× RELATED குன்னத்தில் பாமக மாவட்ட செயற்குழுகூட்டம்