- லப்பைகுடிகாடு
- பெரம்பலூர்
- பேரூர்
- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
- லப்பைக்குடிகாடு ஊராட்சி, குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம்
- டி.எம்.எம்.கே மாவட்டம்
- முகமது இலியாஸ்...
பெரம்பலூர், பிப்.21: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேரூர் கிளை சார்பில் எளியவர்களுக்கு ரம்ஜான் அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்டச் செயலாளர் முகம்மது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குதரத்துல்லா, மாவட்ட பொருளாளர் சையது உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் மீரா மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முகம்மது இலியாஸ் அலி, தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சாதிக், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் கப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இஸ்லாமிய பிரசாரப் பேரவையின் மாவட்டச் செயலாளர் அப்துல் முக்கத்திம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சபியுல்லா, மாவட்ட துணைத் தலைவர் ஹயாத் பாஷா, பேரூர் கிளை நிர்வாகிகள் சர்புதீன், முஹம்மது உசேன், முகமது அனஸ், முகமது இஸ்மாயில், அரும்பாவூர் பேரூர் கிளையின் செயலாளர் ஜாவித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 120க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரமலான் அன்பளிப்பு அடங்கிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
