சென்னை: விவாகரத்து வழக்கில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரி ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் தர் வேம்புவின் மனைவி தொடர்ந்த வழக்கின் விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் தர் வேம்புவின் மனைவி பிரமிளை தாக்கல் செய்த மனுவில், 1993ல் தர் வேம்புவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் ேமல் கலிபோர்னியாவில் வசித்து வந்தேன். கடந்த 2019ல் தர் வேம்பு இந்தியா திரும்பியதையடுத்து 2021ல் விவாகரத்து கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தர் வேம்பு என்னையும், எனது மகனையும் கைவிட்டு விட்டு இந்தியா சென்றுள்ளார்.
எனவே, கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் வழக்கில் சாட்சிகளாக ஸ்ரீதர் வேம்பு அவரது உறவினர்கள், ஜோஹோ கார்ப்பரேஷன் அதிகாரிகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தர் வேம்பு உள்ளிட்டோர் பதில் தருமாறு உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தர் வேம்பு உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை மார்ச் 11ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.
