×

அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ‘ஸ்டாலினின் மகளிர் படை’ வீடுவீடாக பரப்புரை: திமுக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்

 

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஸ்டாலினின் மகளிர் படையினர் நேற்று முதல் வீடுவீடாக சென்று பரப்புரை தொடங்கினர். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள்- எம்பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள், தொகுதி அளவில் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 20ம் தேதி நடந்தது.
கூட்டத்தில் வரும் பிப்ரவரி 23ம் தேதி (நேற்று) முதல் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக மகளிரணியினரது வெல்லும் தமிழ்ப் பெண்கள்- வீடு வீடான பரப்புரை தொடங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரையை திறம்பட மேற்கொள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5-10 மகளிர் உறுப்பினர் கொண்ட ‘ஸ்டாலினின் மகளிர் படை’ அணி உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு வாக்குச்சாவடி வாரியாக ஸ்டாலினின் மகளிர் படை வீடு வீடான பரப்புரை நேற்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு வீட்டிலும் மகளிரிடம் ஸ்டாலினின் மகளிர் படையை சேர்ந்தவர்கள், \\”திராவிடமாடல் அரசின் மகளிர் நலத்திட்டங்களான விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் எண்ணற்ற நலத்திட்டங்களைப் பற்றி பரப்புரையில் ஈடுபட்டனர்.

மகளிர் உரிமை தொகையை முடக்க ஒன்றிய பாஜ அரசு மற்றும் அதன் கூட்டணிக்கட்சி அதிமுகவும் தீட்டிய சதியை முன்கூட்டியே அறிந்து முறியடித்து 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை முன்பணம் ரூ.3000, கோடை கால சிறப்புத் தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வழங்கியதோடு, தொடர உள்ள திராவிட மாடல் அரசில் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த செய்தி அனைத்து பெண்களிடமும் எடுத்துரைக்கப்பட்டது. பெண்களை பயனாளிகளாக மட்டும் எண்ணாமல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் பங்குதாரர்கள் என முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு என்பது மகளிருக்கு முதல்வரின் செய்தியாக தெரிவிக்கப்பட்டது.

வெல்லும் தமிழ்ப்பெண்கள் வீடுவீடான பரப்புரையின் முதல் நாளான இன்று சுமார் 120 தொகுதிகளில் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டனர். ஸ்டாலினின் மகளிர் படை உறுப்பினர்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் பொது மக்கள் சிறப்பான வரவேற்பினை அளித்து வருகின்றனர். திராவிட மாடல் அரசு தொடர்ந்தால் தான் நாலத்திட்டங்களும் தொடரும் ஒன்றிய பாஜவுடன் அதன் அடிமை டப்பா கூட்டணியும் பெண்கள் நலத்திட்டங்களுக்கு எதிரானவை என்று தமிழ்நாட்டு பெண்கள் அனைவரும் அறிந்தே உள்ளனர். தமிழ்நாட்டு பெண்கள் முழுக்க முழுக்க திமுக பக்கமே உள்ளனர் என்பது வெல்லும் தமிழ்ப்பெண்களின் வீடுவீடான பரப்புரைக்கு கிடைத்துள்ள மாபெரும் ஆதரவின் மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது என்று திமுகவினர் தெரிவித்தனர்.

 

Tags : Stalin's Women's Brigade ,DMK government ,Chennai ,Stalin ,Women's Brigade ,Tamil Nadu ,DMK ,President ,Chief Minister ,M.K. Stalin ,secretaries ,
× RELATED சிறப்பு டெட் தேர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி