- மடபுரம்
- மானாமதுரை
- டிஎஸ்பி
- மதுரை
- சிவகங்கை மாவட்டம்
- சண்முகசுந்தரம்
- நீதிமன்றம்
- நிகிதா
- Thiruppuvanam
- அஜித் குமார்
மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நிகிதா என்பவர் தனது நகைகள் காணாமல் போனதாக அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் காவல் துறையினர், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றபத்திரிகையில் எனது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். இதனால், என்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே எனது முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட தயாராக உள்ளேன். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, டிஎஸ்பியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
