- கே.சி வேணுகோபால்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- கனிமொழி
- சென்னை
- திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர்கள்
- அண்ணா அரியலையா
- சென்னை…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை கே.சி.வேணுகோபால் மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தார் என்று கனிமொழி எம்பி கூறினார். திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், சமூக வலைதளப் பொறுப்பாளர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பாசறை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினார். கூட்டத்திற்கு பிறகு கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தார்.
ராகுல்காந்தி கடிதம் கொடுத்து அனுப்பியதாக சொல்கிறார்கள். நான் உடன் இருந்தேன். எனக்கு தெரிந்து அப்படி ஒன்றும் இல்லை. நான் எந்த கடிதத்தையும் பார்க்கவில்லை. திமுக வெற்றிக்காக மகளிரணியினர் தொடர்ந்து பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். எனவே முதல்வர் இந்த முறை தேர்தலில் பெண்களுக்கு மிக அதிகமான வாய்ப்புகளை வழங்குவார். நாங்களும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். சட்டமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். போட்டியிடுவீர்களா என்று நிருபர்கள் கனிமொழியிடம் கேட்டதற்கு, ‘இதுபற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை’ என்று பதிலளித்தார்.
