×

வெ.இண்டீஸ் ரன் வேட்டை; ஹெட்மயர் ஆன் பையர்

 

மும்பை: உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் நேற்று, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் விளாசியது. உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 பிரிவு போட்டியில் நேற்று, வெஸ்ட் இண்டீஸ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீசின் பிராண்டன் கிங் 9, கேப்டன் ஷாய் ஹோப் 14 ரன் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன் பின், ஷிம்ரன் ஹெட்மயர், ரோமேன் பாவல் இணை சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பேட்டிங்கில் அசுரத்தனமாக பந்துகளை வேட்டையாடிய ஹெட்மயர், 19 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் விளாசினார். தொடர்ந்து ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து அவர் ரன்களை குவித்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவருடன் சேர்ந்து ரோமேன் பாவல் அட்டகாசமாக ஆடி 29 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார். 15வது ஓவரில் கிரிமீ கிரெமர் வீசிய பந்தில் ஹெட்மயர் (34 பந்து, 7 சிக்சர், 7 பவுண்டரி, 85 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின், பாவலுடன் ஷெர்பேன் ரூதர்போர்ட் இணை சேர்ந்தார். 17வது ஓவரில் பாவல் (59 ரன்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ், 6 விக். இழப்புக்கு 254 குவித்திருந்தது.

 

Tags : West Indies ,Hetmyer ,Mumbai ,Zimbabwe ,World Cup Super 8 round ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் ஆண்ட்ரீவா...