தர்மபுரி, பிப்.23: தர்மபுரி அருகே ஆடு வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் தாலி பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் மனைவி பாஞ்சாலி(55). ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்ேடஷன் அருகில் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், ஆட்டை வாங்குவது போல, விலை பேசியுள்ளார். ஆனால், ஆடு வாங்குவதாக இருந்தால் தனது கணவரிடம் போய் பேசுமாறு பாஞ்சாலி தெரிவித்துள்ளார். இந்நிலையில், திடீரென அந்த வாலிபர், பாஞ்சாலியை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த கால் பவுன் தாலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைத்தார். இதுகுறித்து பாஞ்சாலி மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
